Sunday, November 21, 2010

மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்



பாடல் : நெஞ்சில் நெஞ்சில்
பாடலாசிரியர்: மதன் கார்கி
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

___________________

ஆண்:
"நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ


மாலை வேளை வேலை காட்டுதோ"

இதுவரை சாதாரண வரிகளே

 "- ‍என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ"

என்ற வரி நன்றாக உள்ளது. அநேகமான அது "மூளை வானம்" (மன வானம் போல? ) என்பதின் எழுத்துப்பிழையால் திரிந்து விட்டது என எண்ணுகிறேன். உறுதியாக  தெரியவில்லை.

அடுத்து வரும்,

"என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்" 

"மின்சாரல்" அட போட வைக்கிறது. மழைச்சாரல் தெரியும், மின்சாரம் தெரியும், அது என்ன மின்சாரல்? குறைந்த அளவு மின்சாரம் உடலெல்லாம் பாய்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். சந்தேகிக்க வேண்டாம், சிலிர்க்கும் போதும் ஒரு வகை மின்சாரல் தான் பாய்கிறது; விஞ்ஞானப்பூர்வமாக.

‍‍‍__________



அடுத்து வரும் மூன்று பத்திகளும் காதலின் தலை நிலை...

ஆண்:
"ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!"

"அசையும் இமையின் இசையில்" இமை அசைகையில், முதலில் ஏது சத்தம்? ஆனால், அங்கே பரவியிருந்த மௌனத்தில் இமை அசையும் சத்தம் கூட கேட்டதாம் (Pin drop silence போலவா?) அதுவும் சத்தமாக கேட்கவில்லை, இசையாக... இனிமையான இசையாக.
ம்...எல்லாம் காதல் படுத்தும் பாடு.

பெண்:
"வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?"

பார்வையை வில், வாள், தூரிகை என solid ஆகத்தான் சொல்லுவார்கள், இங்கே அது "திரவமானதையும்"; astronomy, building, பூ போன்றவையுடன் சித்த‌ரிக்கப்படும் இதயம் இங்கே "புதரானதும்" கவனிக்கப்படவேண்டியவை என்றே எண்ணுகிறேன். படத்தில் இவ்வரிகளை பாடும் கதாபாத்திரம் "complex/complicated or at least tough character"ஆக இருந்தால் மேலும் முக்கியம் பெரும்.  

ஆண்:
"உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)

ஏற்கனவே (இது வரை வந்த பத்திகளில்) "மேலே", "கனா", "நிலா" சென்று உலவுகையில்
"உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த" என்ற வரிகள் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என கொஞ்சம் குழப்புகிறது.
___________________



அடுத்து வரும் மூன்று பத்திகளும் காமத்தின் அமிழ் நிலை

பெண்:
"பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!"

"பசையூறும் இதழும்..." இது பெண் பாடுவது. கேட்பவர் பொருளை சரியாக உணர்தல் முக்கியம். "தன் காமத்தை வெளிப்படுத்த, வர்ணிக்க‌ பெண்ணுக்கு கூடாது கட்டுப்பாது" என எண்ணுவோர் இந்த பத்திக்காக பாடலாசிரியருக்கு பூக்களை அனுப்பலாம். மயிர் என்ற சொல்லாடலை இங்கே சென்ஸார் செய்யவேண்டும் என்ற கருத்து வந்தால் இலக்கியவாதிகள் என்ன சொல்வார்களோ? மொத்தத்தில் இந்த பத்தியில் ப்ளாக்கர்க‌ளுக்கு நல்ல தீனி கிடைக்க ஆரம்ப புள்ளி வைத்துள்ளார் பாடலாசிரியர் :)   

ஆண்:
"ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே"

ஏற்கனவே பெண் தன் இதயத்தை "புதர்" என்று கூறியுள்ளாள், ஆனால் இந்த பத்தியில் ஆண் அதனை "வெள்ளைத் திரை" என்பது பொருத்தமானதாக இல்லை. கதாப்பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமலேயே காதலித்து காமம் கொள்ளும் நிலையில் இப்பாடல் வந்தால் மட்டும், இது முரணாகாது.

"விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே"
இப்பாடலில், பலரையும் ரசிக்கவைக்கும் மேலும் இரு வரிகள்.


பெண்:
"விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)"

இது வரை சிறப்பான வரிகளுடன் "அட, ஆஹா, ம். நடக்கட்டும் நடக்கட்டும்", என நம்மை ரசிக்க வைத்து வந்த பாடலாசிரியர் திடீரென "ஏதோ ஒண்ணு, முடிச்சிவிட்ருவோம். இவங்க எப்பவுமே இப்படித்தான நெனப்பாங்க‌" என எண்ணி எழுதியது போல் உள்ளது இந்த கடைசி பத்தி. Just filler lines.

மொத்தத்தில் பாடல் நன்றாகவே உள்ளது, கேட்கவும் ரசிக்கவும். ஆனால் சிறந்த பாடல்களுள் ஒன்று என சொல்லுவதர்க்கில்லை, அதற்கான அம்சங்கள் சில இருப்பினும்.

Sorry கார்கி.
With no offence...

Disclaimer: இது பாடல் விமர்சனம் அல்ல. இந்த பாடல் பற்றிய என் எண்ணங்கள்.


ஒரு பாளோ அப் :

அது மூலை வானம் தான். எந்த பிழையும் இல்லை.
மூலை வானம் என்றால், .... ஆங்கிலத்தில் Horizon *
Horizon க்கு தமிழில்
கீழ்வானம், தொடுவானம் என்ற பதங்கள் இருப்பது, சாதாரணமாக அறிந்ததே.

மாலை வேளையில் கீழ்வானம் செக்கர் வானமாத்தான் இருக்கும். அப்படி சிவப்பாக இருக்கும் கீழ்வானம், தன் நெஞ்சில் வந்த காதல் தீயினால் தானோ  என கேட்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Horizon  பற்றி  Dr. Hugo Heyrman யின் The art of the horizon கவிதை:

I saw the horizon,
the horizon is factor x,
the horizon is what everything encloses,
the horizon divides earth, sea and sky,
the world is unthinkable without the horizon,
the horizon is a boundary where man cannot come,
the horizon exists between the visible and the invisible,
the horizon is not inside or outside the world,
the horizon of art is factor x.

In reality there is no horizon,
I cannot get near the horizon,
I try to push the horizon further away,
all and everything appears within the horizon,
behind every horizon there is another one,
everybody has his own horizon. 

The horizons are within us,
Infinity overflows all horizons.


Courtesy for The art of the horizon: http://www.doctorhugo.org/e-poetry/horizon.html
* http://twitter.com/madhankarky in reply to sridharang

Picture(s) courtesy: http://www.moviegalleri.in/2010/11/engeyum-kadhal-movie-stills-engeyum.html
Lyrics and picture courtesy: http://madhankarky.blogspot.com/2010/11/lyric.html                                                                                                                                           
                                                                                                                                                                  

4 comments:

டிலீப் said...

கவிதைகளுக்கு சிறந்த விளக்கம் வாழ்த்துக்கள்

அஹமது இர்ஷாத் said...

Enakku intha song romba pidikkum...iam Totally Surrender this music...

mithun said...

i don agree wid ur explanation.... madan karky rocks... i don no wat u people r expecting more den dis....madhan karky is rocking...

Prasanna said...

நல்லா ரசிச்சி இருக்கீங்க :) நானும் ரசிக்கறேன்..

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...