Wednesday, November 24, 2010

விக்னேஷ்வரியின் பதிவிற்கு எதிர்பதிவு, பின்பதிவு, ஏதோ ஒண்ணு

கணவன்மார்களை நக்கலடிக்கும் விதமாக விக்னேஷ்வரி இட்ட பதிவிற்கு பதில்பதிவு. (எல்லாம் ஒரு ஹ்யூமர் தான்)

//=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்.....//

காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா.....

இது என்னடா புது புரளியா இருக்கு...! கி.மு ல கூட எந்த பொண்டாட்டியும் இப்டி எழுப்புனதா சரித்திரம், தரித்ரம் எதுவும் இல்லையே...?????
(மாசம் முதல் தேதி, உங்க அப்பா அம்மாவ பாக்க போறதுக்கு டிக்கெட் (எங்க கிரெடிட் கார்டுல) போடுற நாள், உங்க தம்பி ஊருக்கு என்னைக்கு போவான்னு கேட்ட மறுநா காலை தவிர‌ )



//=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே...//

கிளிப்பச்சைன்னா, அம்மா கிளி பச்சையா, அப்பா கிளி பச்சையா, குட்டி கிளி பச்சையா..?
சொல்றத கரிகிட்டா சொல்றது இல்ல அப்புறம் பச்சபுள்ளய திட்டிகிட்டு...
(கிளம்புறப்ப எதிர்த்த வீட்டு கிளி "பச்சையா போட்ருந்த டிரஸ்" இந்த கலர் தானே....ஹி...ஹி.. )



//=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது ...//

தினம் நல்லா ..அட்லீஸ்ட்.. வாயில வைக்குற மாதிரி இருந்தா ஏம்மா இப்டி கேக்குறோம்.



=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.

.....எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி.... (இத நல்லா படிங்க)....
இப்ப சொல்லுங்க ஃபோன் வீட்டுலயெ இருக்குறது யார் தப்பு?
ஒரு வேல‌ய பண்ணா ஒழுங்கா பண்ணனும்.  ஆபிஸ்ல தான் உங்க தப்பை அடுத்தவங்க தலைல கட்ரீங்கன்னா, வீட்லையுமா...?



//=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. //

இது நம்மள விட புருஷன் யோக்கியமானவனா இருக்கானேங்குற பொறாமையா....?
இல்ல‌
நம்ம டெக்கினிக்கையேத்தான் இவனும் ஃபாலோ பண்றானோங்ற டவுட்டா..?
(முதல்ல emotional atyachar  பாக்குறத நிறுத்துங்க‌)



//...எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...//

நீங்க கேட்ட De Beers நெக்லஸ், ரிங் வாங்க அந்த சீனு கிட்டத்தான் உங்க அப்பாவுக்கு கால் உடஞ்சிருச்சு, அம்மாவ நாய் கடிச்சிருச்சுன்னு சென்டிமண்ட் கத சொல்லி கடன் கேட்ருப்போம்....


=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...

அப்டி யெல்லாம் டவுட் ஆகாதீங்கமா. ஆஃபிஸ்ல இருக்குற பொண்ணுங்க பிளாக் போடுற வேலைய இல்ல அவங்க பாய்ஃபெரண்டுக்கு போன் போடுற வேலயத்தான் பாக்குறாங்க...... அப்புறம் ஆம்பிளங்க தான எல்லா வேலயையும் பாக்க வேண்டி இருக்கு, ஆபிஸ்லயும்.
(என்னமோ உங்களுக்கு தெரியாத மாதிரி......)


=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!

விடும்மா. செத்துப்போன நாக்கு அப்டித்தான் உப்பா, உரப்பா எதுனா பாத்தா துடிக்கும். என்னது எப்டி செத்து போச்சா...? ஹி...ஹி...என்னமா நீங்க சமச்சதத்தான மதியம் கூட சாப்புடுறோம். (பாம்பேல இருக்குற டப்பாவாலாக்கெல்லாம் டெங்கு ஜொரம் வந்தாலும் லீவு போடமாட்டேன்றானுகளே)



=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...

என்னமா இது புது பழக்கம்?  பெர்மிசனெல்லாம் கேட்டுகிட்டு,
(ஹலோ அப்பலோ, ...ஆமா நானே தான்....ஆமா அதே வார்ட்க்கு தான்....அதே பெட் தானா. தாங்க் யூ)


=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...

அதுனால என்ன. டிபென்டென்ட் கார்ட் தான அது.
இல்லனாலும் ஸ்டேட்மென்ட் வந்தவுடனே கரெக்ட்டா ஞாபகம் வச்சி எங்க செக்புக்ள நீங்களே ஃபில்அப்பும் பண்ணி கையெழுத்து போட சொல்லி நீட்டாமலா விடுறீங்க.
(உங்க கார்டுல இருந்து எங்களுக்கு ஒரு ரேஸர் செட்டாவது வாங்கி கொடுத்திருக்கீங்களா? )



=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..

இது பரவாலம்மா. "ஏங்க, இன்னைக்கு நா அழகா இருக்கேனா?, இன்னைக்கு நா ஸ்லிம்மா ஆயிட்டேனா"னு நீங்க நிதோம் கேக்குறீங்களே. ஒரு நாளைக்கு எத்தன இன்னைக்கு இருக்கு?
( மனசாட்சிய ஆஃப் பண்ணத்தாம்மா பார்டிக்கு போறோம் )



=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...

எங்க அப்பா அம்மா ஊருல இருந்து வர்றப்ப, ரிசீவ் பண்ண ஏர்போர்ட் போறதுக்கு உங்களுக்கு பர்மீஸன் தர முடியாதுனு சொன்னானே ஒரு மானேஜர் அவன மாதிரியே தான்மா எங்க மானேஜரும், ஃபேட் ஃபெள்ளோ.


=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.

வெளிய போறோம்னா நீங்க அதான் சாக்குன்னு அன்னைக்கு கிச்சன் பக்கமே போறது கிடயாது. காபியே ஆன் தி வே பரிஸ்டால தான். இதுல ஆஃப் பண்ணிடுங்களேனு பில்டப்பு. ஆன் பண்ணாத சிலிண்டர எபப்டி ஆஃப் பண்றது....?!!!!!



=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...

நீங்க பாக்குற சீரியல்ல அன்னைக்கு என்ன தீமோ அதே மூட வீட்ள எஸ்டாப்ளிஷ் பண்றீங்களே, அத விடவா? சீரியல்ல எழவு எபிஸோட் வந்தா அன்னைக்கு வீட்ல வெளக்கு கூட ஏத்த மாட்டீங்க. அன்னைக்கு உங்க அத்த மாமாவோட வெட்டிங் டேவா இருந்தாலும் அவங்க கிட்டயே, "என்னத்தே இன்னைக்கு அகத்திகீர சமைக்குறீங்களா",னு கேக்குறீங்களே, உங்கள எந்த காட்டுல போய் விட்றது....


=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

மெனு கார்டை உங்க கிட்ட  கொடுக்குறது, ஆர்டர் பண்றதுக்கில்லமா....

1. ஒவ்வொரு அயிட்டம் பக்கத்துலயும் வெல எவ்வளவுனு போட்டிருப்பாங்க அத நீங்க பாக்கணும்னு தான். அது மட்டுமில்ல‌

2. நீங்க வீட்ல திரும்பித் திரும்பி சமைக்குற அதே இட்லி, தோச, சப்பாத்தி, தயிர் சாதம்; இந்த நால தாண்டி உலகத்துல எவ்ளோOOO அயிட்டம் இருக்குனு நீங்க தெரிஞ்சிக்கணும்னு தான்.


பின்குறிப்பு: இதையெல்லாம் அங்கையே பின்னூட்டமா போட வேண்டியது தானேனு கேக்குறீங்களா என்ன பண்றது இந்த கடையில பதிவு போட நேரமாச்சு, அதான்.
Picture courtesy: http://www.corbisimages.com/Enlargement/NT3776635.html



4 comments:

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்ல நகைச்சுவைப் பதிவு. நல்லா இருக்குங்க.

வெங்கட் said...

ingeyum oru ethirpathivu irukku..
எதிர்பதிவு

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் பதில்கள்..

சௌந்தர் said...

நல்லா இருக்குங்க எப்படியோ ஒரு பதிவு தேதியாச்சி எனக்கு இதை பார்த்த பிறகு விக்னேஷ்வரி க்கு எதிர் பதிவு போடலாம் இருக்கேன்....ஹி ஹி ஹி

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...