Thursday, December 2, 2010

இன்று ப்ரியாவிடம் நான்…

இன்று ப்ரியாவிடம் நான்
மனம் திறந்து சொல்லிவிட‌ப்போகிறேன்.
இப்படி என்னை மெல்ல, மெல்ல கொல்லாதே.
இந்த அவஸ்தையை இனிமேலும் பொருக்க முடியாது.

நேருக்கு நேராக அவள் கண்களை பார்த்து சொல்வதா, அல்லது
அவள் முன் மண்டியிட்டு கைகள் குவித்து சொல்வதா?

இந்த PG medical research instituteடில் செகண்ட் இயர் மாணவி, ப்ரியா. நானோ
இங்கு வந்து சேர்ந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை.
அவள் batchmate கள் மட்டும் அல்ல ஆசிரியர்கள் சிலரே
அவளுடன் பேச, பழக ஆசைபடுவார்கள்.
ஆனால், இங்கு வந்து சேர்ந்த நாளில் இருந்தே நாங்கள்
இருவரும் பல நாள் பழகியவர்கள் போல, எந்தவித தயக்கமும்
இன்றி பழக ஆரம்வித்துவிட்டோம்.

சொல்லப்போனால் ப்ரியா என்னை பார்க்கும் பார்வையில்
இப்போது மெல்ல, மெல்ல வித்தியாசம் தெரிகிறது.




என்னுள், அவள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்
எனக்கும் நன்றாகவே தெரிகிறது. சில நாட்களாக
சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை.
அவ்வப்போது, என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என்று
எனக்கே தெரியாமல் அப்படியே மயங்கி இருப்பேன்.

நான் இங்கு வந்து சேர்ந்த புதிதில், என் சீனியர் ஒருவனும்,
இப்படித்தான் இருந்தான். நான் அவனை நக்கலாக சிரிப்பதை
பார்த்து ஒரு நாள், "தம்பி, இது எல்லாம் அனுபவிச்சாத்தான்டா புரியும்",
என்றான். இன்று புரிகிறது.

இதோ, ப்ரியா வந்துவிட்டாள்.
ஆனால், கூடவே அவள் தந்தையுமான ப்ரொபஸர்.
என்னை பார்த்ததும் ப்ரியா சற்று தயங்கி நின்றாள்.

"It's, OK. Your decision is right, proceed", என்றார்.
ப்ரியா என்னை நெருங்கி வந்து,
என் கண்களை பார்த்து, "Sorry", என்றாள்.

என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளும்
முன்னர், ஏதெதோ நடந்துவிட்டது.

"Thanks, Priya",
என்று கண்ணீர் சிந்தியபடி
கடைசியாக, மெல்ல கண்களை மூடிய நான்;
புதிய மருந்துகளின் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டு
கருணைகொலை செய்யப்பட்ட‌
ஒரு அப்பாவி ஜீவன், வில‌ங்கு என்று சாதாரணமாக குறிப்பீர்களே மனிதர்களே....

(மீள்பதிவு)
Picture courtesy: http://fc01.deviantart.net/fs29/i/2008/101/0/c/College_Girl_by_EndOfLine.jpg

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...